பழநி : பழநியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடை அருகே தி.மு.க., அ.தி.மு.க., வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பழநியில் பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகே அ.தி.மு.க., பதாகைகள், கொடிகள் கட்ட தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று வடக்கு ரத வீதி ரேசன் கடை கட்டடத்தில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பெயர் கறுப்பு, சிவப்பு நிறத்தில் எழுதப் பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க.,வினர் கடைமுன்பு குவிந்தனர். உடனே தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடை அருகே வைத்திருந்த பேனர்களுக்கு தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இரு தரப்பையும் தடுத்தனர்.
தொடர்ந்து வாக்குவாதம் செய்ததுடன், கட்சி தலைவர்களையும் கண்டித்து இருதரப்பும் கோஷம் எழுப்பியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE