திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்கள் டூவீலர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
அரசின் இருசக்கர வாகன திட்டத்தில் வேலைக்கு செல்லும் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்கள் டூவீலர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. வயது 18-40 க்குள், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் பயனடையலாம். டூவீலர் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். பெண் மாற்றுத்திறனாளிக்கு ரூ.31,250 மானியமாக வழங்கப்படும். உள்ளாட்சி அலுவலகங்களில் விண்ணப்பம் இலவசம். வயது, இருப்பிடம், ஓட்டுனர் உரிமம், வருமானம், கல்வி, சாதி சான்று, பணிபுரியும் நிறுவன சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE