பழநி : வரும் ஜன.28 ம் தேதி தைப்பூச நாளை பொது விடுமுறையாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்ததை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ளதை முருக பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பழநியில் ஹிந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் நன்றி தெரிவத்துள்ளனர்.திண்டுக்கல் மேற்குமாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ்: வேல்யாத்திரையின் போது பா.ஜ., மாநில தலைவர் முருகன் இதனை வலியுறுத்தினார். அதன் படி தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது போன்ற நடவடிக்கையை வரவேற்கிறோம். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
ஹிந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன்: தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதேபோன்று அனைத்து முக்கிய ஹிந்து பண்டிக்கைகளுக்கும் பொது விடுமுறை அறிவிப்பதுடன், தமிழக அரசு சார்பில் வாழ்த்தும் தெரிவிக்க வேண்டும். ஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை அமைப்பாளர் செந்தில்குமார்: இந்த அறிவிப்பால் முருகபக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE