தமிழ்நாடு

அகற்றலாமே! நடைபாதைகளில் பெருகும் ஆக்கிரமிப்பு .... ரோட்டில் நடக்கும் நிலையில் பாதசாரிகள்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரங்கள், பொதுமக்கள் நடக்கும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பிடியில் உள்ளதால் பாதசாரிகள் ரோட்டில் நடக்கும் நிலையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் பிரதான ரோடுகள், பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல ரோட்டின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கும். ரோட்டில் மக்கள் நடந்து சென்று
 அகற்றலாமே!   நடைபாதைகளில் பெருகும் ஆக்கிரமிப்பு ....  ரோட்டில் நடக்கும் நிலையில் பாதசாரிகள்

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரங்கள், பொதுமக்கள் நடக்கும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பிடியில் உள்ளதால் பாதசாரிகள் ரோட்டில் நடக்கும் நிலையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஊர்களிலும் பிரதான ரோடுகள், பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல ரோட்டின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கும். ரோட்டில் மக்கள் நடந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க இதுபோன்ற பாதைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் பெரும்பாலான ஊர்களில் நடைபாதைகள் அந்தந்த பகுதி கடைகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கடைகளை நடைபாதை வரை நீட்டித்து வைத்தும், கடை பொருட்களை நடைபாதையில் வைத்தும் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மக்கள் வேறு வழியின்றி ரோடு ஓரத்தில் நடந்து செல்லலாம் என்றால் அங்கும் வரிசையாக கடைகளை பரப்பி வைத்துள்ளனர். இதனால் மக்கள் ரோட்டில் தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு வழிகாணும் வகையில் ரோட்டோரம்,நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் வழி வகை காண வேண்டும்.......மனதுவையுங்கஅதிகாரிகளின் அலட்சியத்தால் நிரந்தரமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகின்றன.

அடிக்கடி ஆக்கரிமிப்புகள் அகற்றும் பணியை செய்தால் ஆக்கிரமிப்பு செய்வோர் பயப்படுவர். மக்களும் நடைபாதையில் நடந்து செல்வர். போக்குவரத்து நெரிசலும் குறையும். அதிகாரிகள் தான் மனது வைக்க வேண்டும்.பாலமுருகன், தனியார் ஊழியர்,அருப்புக்கோட்டை.............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X