வேடசந்துார் : வேடசந்துார் தாலுகா பகுதியில் புதிய நடவாக பீட்ரூட் விவசாயத்தில் விவசாயிகள்ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு நடப்பு பருவத்தில் மானாவாரி விவசாயமாக நிலக்கடலை,கம்பு, சோளம் உள்ளிட்டபயிர் வகைகள் பயிரிடப்பட்டு மகசூல் எடுக்கப்பட்டன. இதையடுத்து தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள், பீட்ரூட் விவசாயத்தில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.பீட்ரூட், உருளைக் கிழங்கு சாகுபடிமலையில் தான் நடைபெறும் என நம்பினர். தற்போது தரைப் பகுதியிலும் பீட்ரூட் விளைவிக்க முடியும் என்பதால், வேடசந்துாரில் ஆர்வம் காட்டுகின்றனர். வேடசந்துார் தாலுகாவைச் சேர்ந்த வெரியம்பட்டி, விராலிப்பட்டிபகுதிகளில் பீட்ரூட் விவசாயம் நடக்கிறது.
இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ''பயிரிட்ட 75 நாளில் மகசூல் எடுக்கலாம். தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை போகிறது. இதற்கும் இரண்டு, மூன்று முறைமருந்து தெளிக்க வேண்டியுள்ளது. மற்றபடி நமது பகுதியிலும் மகசூல் பாதிப்பில்லை'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE