எனக்கு ஓய்வு கொடுங்களேன்; காங்., பொறுப்பாளர் கதறல்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பாட்னா: பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து, தன்னை விடுவிக்கும்படி, கட்சி தலைமைக்கு, சக்திசின்ஹா கோஹ்லி கோரிக்கை விடுத்து உள்ளார்.பீஹார் மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியடைந்தது. பீஹார் மாநில காங்., பொறுப்பாளராக, மூன்று ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர், சக்தி சின்ஹா
Congress, Relieve, ShaktisinhGohil, Bihar, InChargePost, பீஹார், காங்கிரஸ், பொறுப்பாளர்

பாட்னா: பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து, தன்னை விடுவிக்கும்படி, கட்சி தலைமைக்கு, சக்திசின்ஹா கோஹ்லி கோரிக்கை விடுத்து உள்ளார்.

பீஹார் மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியடைந்தது. பீஹார் மாநில காங்., பொறுப்பாளராக, மூன்று ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர், சக்தி சின்ஹா கோஹ்லி. இவர் ராஜ்யசபா எம்.பி.,யாகவும், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கோஹ்லி வெளியிட்டுள்ள பதிவில்கூறியிருப்பதாவது: பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து என்னை விடுவிக்கும்படி, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். என் உடல் நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்த கோரிக்கையை விடுத்துள்ளேன். அடுத்த சில மாதங்களுக்கு, பெரிய அளவிலான பொறுப்பு அல்லது பணி எதையும் எனக்கு தர வேண்டாம் என்றும், கட்சி தலைமையை வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.


latest tamil news


கோஹ்லி, கடந்த நவம்பர் மாதம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மேலும், தேர்தலில் ஏற்படும் தொடர் தோல்விகளும், அவருக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே, தலைமைக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக, பீஹார் காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
07-ஜன-202121:08:36 IST Report Abuse
madhavan rajan கோரிக்கையெல்லாம் அனாவசியம். ராஜினாமா செய்துவிட்டு போவதுதான் சரி. 2019 தேர்தல் தோல்விக்குப்பிறகு அதைத்தானே ராகுல் காந்தி செய்தார். இவருக்கு மட்டும் எதற்கு கோரிக்கை.
Rate this:
Cancel
Prabhagharan - Madurai,ஓமன்
06-ஜன-202115:56:10 IST Report Abuse
Prabhagharan ஓய்வு, பென்ஷன் எல்லாம் கிடைக்கும்
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
06-ஜன-202115:35:22 IST Report Abuse
K.ANBARASAN பார்த்தாலே பாவமா இருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X