சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேருக்கும் நீதிமன்ற காவல்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் என 5 பேர் கடந்த 2019ம் ஆண்டு
பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, கைது, அதிமுக, காவல்,

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் என 5 பேர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மகளிர் கோர்ட்டில் அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.


பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிமுக நிர்வாகி அருளானந்தம் கைது! பாதிக்கப்பட்ட 3 பெண்கள் வாக்குமூலம்; சிபிஐ தகவல்

latest tamil news




இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹேரன் பால் (29), பாபு(எ) பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் அதிமுக.,வை சேர்ந்தவர்கள். சி.பி.ஐ., 3 பேரையும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 3 பேருக்கும் ஜன.,20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.


மேலும் 2 பெண்கள் வாக்குமூலம்


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு பெண் வாக்குமூலம் அளித்த நிலையில், மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.




அதிமுகவிலிருந்து நீக்கம்


பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலராக இருந்த அருளானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


விரைவாக தண்டனை: ஸ்டாலின் கோரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இருந்து ஒரு குற்றவாளி கூட தப்பித்து விடக்கூடாது. இந்த கொடூரத்திற்கு காரணமானவர்கள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தினர் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை நினைத்து அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்த வழக்கில் தோண்ட தோண்ட இன்னும் நிறைய தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும். பார் நாகராஜன் போல உடனே ஜாமின் கிடைக்க வழி ஏற்படுத்தி விடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-ஜன-202113:19:33 IST Report Abuse
Malick Raja இவர்களில் யாருக்குமே ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இல்லை.. ஆனால் சிலரை பிடிக்காமல் பாதுகாத்து வத்தது தமிழக அரசு ..அல்ல அதிமுக அரசு ..நேர்மையின் சிகரம்,தன்மானத்தின் சின்னங்கள் இருக்கும் அமைச்சரவை கொண்ட அரசல்லவா
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜன-202119:34:55 IST Report Abuse
தமிழவேல் லக்னோ பானியிலே நடந்திருக்கு... கூட்டணிக்கு இதுவும் ஒரு காரணமோ.. 🤔
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-ஜன-202113:25:08 IST Report Abuse
Malick Rajaஅப்படியெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது. இது உள்ளே .. அது வெளியே ..கூட்டணிக்கு பொருத்தம் ..நன்று ஆனால் வீழ்வது மட்டும் நிச்சயம் .. அதிமுக காரரை அடைக்கலம் கொடுத்து காதலும் ஒருவகை அறிப்பணிப்போ ? என்ன சொன்னாலும் உணர்வுக்கு வேலை இல்லை .....
Rate this:
Cancel
06-ஜன-202118:07:57 IST Report Abuse
Ram Pollachi இளவட்டம் செய்யும் லீலைகளை தினமும் கண்ணால் பார்க்கிறோம் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு துளி கூட இல்லை. உழைத்தால் சம்பாதிக்க முடியாது மானம், மரியாதையை விட்டால்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X