சேலம்: சேலம், கலெக்டர் அலுவலகம் முன், '108' அவசரகால ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், ஜி.வி.கே.,- இ.எம்.ஆர்.ஐ., நிர்வாகத்துக்கு எதிராக, நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊழலை சுட்டிக்காட்டியதற்கு, மாநில பொருளாளர் உள்பட பலரை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அவற்றை திரும்ப பெறுதல்; மக்களின் சேவைக்கு, 24 மணி நேரமும், '108' அவசரகால ஆம்புலன்ஸ்களை இயக்குதல்; தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தி, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்குதல்; கொரோனா சிறப்பு நிதி, பெறாதவர்களுக்கு வழங்குதல்; சம்பள உயர்வு வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். சங்க கிழக்கு மாவட்ட செயலர் மணிகண்டன், மேற்கு மாவட்ட செயலர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE