பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை இழிவுபடுத்திய அமைச்சர்: தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேச்சு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
சேலம்: ''அமைச்சர் சீனிவாசன், ஒட்டுமொத்த மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார்,'' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசினார்.சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., சார்பில், 'ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப்போறாரு' தலைப்பில், இரண்டாம் நாளாக, தேர்தல் பிரசாரம், நேற்று நடந்தது. அதில், சன்னியாசிகுண்டு பிரதான சாலை, ஆண்டிப்பட்டி ஏரி பகுதி, லைன்மேடு, அம்மாபேட்டை, மிலிட்டரி ரவுண்டானா,

சேலம்: ''அமைச்சர் சீனிவாசன், ஒட்டுமொத்த மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார்,'' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசினார்.


சேலம் மத்திய மாவட்ட, தி.மு.க., சார்பில், 'ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப்போறாரு' தலைப்பில், இரண்டாம் நாளாக, தேர்தல் பிரசாரம், நேற்று நடந்தது. அதில், சன்னியாசிகுண்டு பிரதான சாலை, ஆண்டிப்பட்டி ஏரி பகுதி, லைன்மேடு, அம்மாபேட்டை, மிலிட்டரி ரவுண்டானா, தாதகாப்பட்டி கேட் உள்ளிட்ட பகுதிகளில், நெசவாளர்கள், வியாபாரிகள், மக்கள், லாரி உரிமையாளர்கள் என, பல்வேறு தரப்பினருடன், எம்.பி., தயாநிதி கலந்துரையாடி, குறைகளை கேட்டார்.

அதில், எம்.பி., தயாநிதி பேசியதாவது: பின்தங்கிய சமூகம் படித்து முன்னேற காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவர் வழங்கிய இட ஒதுக்கீடால், பெரும் முன்னேற்றம் கிடைத்தது. பல தலைமுறை படிக்காத நாம், இப்போதுதான் இரண்டாவது தலைமுறையாய் படிக்க தொடங்கியுள்ளோம். இந்த நேரத்தில், மோடியரசு, உயர் ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதற்கு ஆதரவாக இருந்து, முதல்வர் பழனிசாமி துரோகம் செய்துள்ளார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொங்கல் பரிசுத்தொகை வாங்கியவுடன், டாஸ்மாக்கில் கொண்டு வந்து கொடுத்துவிடுவர் என ஏளனமாக பதில் கூறி, ஒட்டுமொத்த மக்களை இழிவுபடுத்தி பேசுகிறார். இது, வன்மையாக கண்டிக்கக்கூடியது. இதற்கு, வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். குடியுரிமை சட்டத்துக்கு, முதலில் எதிர்ப்பு தெரிவித்தது, தி.மு.க., தான். இதற்கு ஆதரவளித்த, அ.தி.மு.க., - பா.ம.க.,வை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், மத்திய மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X