2016ம் ஆண்டு கலவர வழக்கில் சிக்கியோர் போலீசார் தேடுவதால் தலைமறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2016ம் ஆண்டு கலவர வழக்கில் சிக்கியோர் போலீசார் தேடுவதால் தலைமறைவு

Added : ஜன 06, 2021
Share
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீசார் - மக்கள் இடையே, 2016ல் கலவரம் நடந்தது. அந்த வழக்கில் சிக்கியோரை, போலீசார் தேடுவதால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.இளம்பிள்ளை, கோனேரிப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி சரவணகுமார், 22. இவர், மெய்யனூர், கூட்டத்துபுளியமரம் அருகே, பைக்கில் வந்தபோது, வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீசார் வழிமறித்தனர். அப்போது, வேன் மோதி, சரவணகுமார் பலியானார்.

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீசார் - மக்கள் இடையே, 2016ல் கலவரம் நடந்தது. அந்த வழக்கில் சிக்கியோரை, போலீசார் தேடுவதால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.


இளம்பிள்ளை, கோனேரிப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி சரவணகுமார், 22. இவர், மெய்யனூர், கூட்டத்துபுளியமரம் அருகே, பைக்கில் வந்தபோது, வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீசார் வழிமறித்தனர். அப்போது, வேன் மோதி, சரவணகுமார் பலியானார். இச்சம்பவம், 2016 டிச., 19ல் நடந்தது. ஆத்திரமடைந்த மக்கள், மகுடஞ்சாவடி போலீசாரை தாக்கி, அவர்களது இரு பைக்குக்கு தீ வைத்தனர். போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்தினர். இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து, 70க்கும் அதிகமானோரை கைது செய்த நிலையில், ஜாமினில் வெளிவந்தனர். ஒரு வாரமாக, அந்த வழக்கில் சிக்கியோர் வீடுகளுக்கு சென்று, போலீசார், ரேஷன் அல்லது ஆதார் அட்டை நகல்கள், புகைப்படம் வேண்டும் என கேட்கின்றனர். இதனால், அந்த வழக்கில் சிக்கியோர் பீதியடைந்து தலைமறைவாகி வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்படாமலும், முன்ஜாமின் எடுக்காமலும் உள்ளனர். நீதிமன்றத்தில், வழக்கை முடிக்க வேண்டியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தேடுகிறோம். மற்றபடி எதுவும் இல்லை' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X