சேலம்: சேலம், குழந்தை இயேசு பேராலயத்தில், 30ம் ஆண்டு முத்துப்பெருவிழா, நேற்று தொடங்கியது. அதில், வாழப்பாடி பங்குத்தந்தை சிங்கராயர், கொடி பவனி, கொடியேற்றத்துடன், விழாவை தொடங்கிவைத்தார். இன்று முதல், வரும், 14 வரை, தினமும் மாலை, 6:00 மணிக்கு, பங்குத்தந்தைகள், போதகர்கள், பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். ஜன., 15 காலை, சேலம் மறை மாவட்ட, அப்போஸ்தலிக்க பரிபாலகர் லாரன்ஸ் பயஸ், திருவிழா திருப்பலி, நற்கருணை அருட்சாதனம் நடத்த உள்ளார். அன்று மாலை, புனித பால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மாணிக்கம், நன்றி திருப்பலி செய்வார். தொடர்ந்து, திருத்தேர் மந்திரிப்பு, நற்கருணை ஆசீர்களை, அருளப்பன் வழங்குவார். இரவில், உதவி பங்குத்தந்தை ஸ்டேன்லி சேவியர், விழா கொடியிறக்கம் செய்வார். இதற்கான ஏற்பாடுகளை, பங்குத்தந்தை ஜோசப் லாசர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE