பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையத்தில், வரும், 10ல், எப்.சி.சி., கிங்ஸ் சார்பில், மாநில அளவில் கிரிக்கெட் போட்டி தொடங்கி, 14 வரை நடக்க உள்ளது. அதில், முதலில் பதிவு செய்யும், 32 அணிகள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். முதல் பரிசு, 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அடுத்து, இரண்டு முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே, 50 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விபரங்களுக்கு, 98652 29028, 99946 32098 என்ற எண்களில் அழைக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE