பொது செய்தி

தமிழ்நாடு

6, 7ம் வகுப்பு மாணவருக்கு 3ம் பருவ பாடப்புத்தகம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
வீரபாண்டி: கொரோனாவால் ஊரடங்கால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையில், பாடங்கள் நடத்தப்படுவதால், முதல் இரு பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறாம்

வீரபாண்டி: கொரோனாவால் ஊரடங்கால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையில், பாடங்கள் நடத்தப்படுவதால், முதல் இரு பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர், 37, ஏழாம் வகுப்பு மாணவர், 41 பேருக்கு, புத்தகங்கள், சீருடைகளை, தலைமையாசிரியர் இளங்கோவன், நேற்று வழங்கினார். அதேபோல், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, ஒரு மாத அரிசி, பருப்பு, உலர் தானியங்கள் வழங்கப்பட்டன.

வேட்டி தினம்: அதேபோல், கெங்கவல்லி அருகே, கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை, தலைமை ஆசிரியர் செல்வம் வழங்கினார். வேட்டி தினத்தையொட்டி, மாணவர்கள், வேட்டி சட்டையுடன் வந்து, புத்தகங்களை பெற்றுச்சென்றனர்.

விலையில்லா சைக்கிள்: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 336 மாணவருக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிரேசன், மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அதேபோல், இடைப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன் தலைமையில், கதிரேசன், 315 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X