ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, நாளை, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில், இன்று காலை, 9:00 மணிக்கு பவானி, அந்தியூர் பிரிவில், பிரசாரத்தை துவக்குகிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்வர், 10:00 மணிக்கு அந்தியூர் சாலை, கே.எம்.பி., மஹாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடிவிட்டு, அந்தியூரில் 11:00 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்தியூர் வாரி மஹாலில், 12:00 மணிக்கு வெற்றிலை விவசாயிகள், சமுதாய தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். மதியம், 1:00 மணிக்கு அத்தாணி, 1:30 மணிக்கு கள்ளிப்பட்டி, 3:30 மணிக்கு நால் ரோடு, 4:00 மணிக்கு சத்தியமங்கலத்திலும் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகிறார். பின், நல்லூர் ஈ.பி.பி., மஹாலில் உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். புஞ்சை புளியம்பட்டியில், மாலை, 5:30 மணிக்கு வரவேற்பு, 6:30 மணிக்கு காந்தி நகரில் உள்ளூர் பிரமுகருடன் பேசுகிறார். இரவு, 7:00 மணிக்கு நம்பியூரில் பேசிவிட்டு, கோபியில், 9:00 மணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கோபியில் ஏற்பாடு தீவிரம்: கோபியில் இன்றிரவு, 9:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். இதனால், கரட்டூர் நுழைவுவாயில் முதல், கரட்டடிபாளையம் வரை, சாலையின் இருபுறமும், முதல்வரை வரவேற்று, கட்சி கொடிகள் நடப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE