பொது செய்தி

தமிழ்நாடு

கூடலூருக்கு அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
அரூர்: அரூர்-கூடலூர் வழித்தடத்தில், அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, கூடலூர் வரையிலான வழித்தடத்தில், சுமைதாங்கி மேடு, எல்லப்புடையாம்பட்டி, கௌாப்பாறை பிரிவு சாலை, கூச்சனூர், ஈட்டியம்பட்டி, பூ நகர், பாப்பநாவலசை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்,

அரூர்: அரூர்-கூடலூர் வழித்தடத்தில், அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, கூடலூர் வரையிலான வழித்தடத்தில், சுமைதாங்கி மேடு, எல்லப்புடையாம்பட்டி, கௌாப்பாறை பிரிவு சாலை, கூச்சனூர், ஈட்டியம்பட்டி, பூ நகர், பாப்பநாவலசை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக, அரூரில் இருந்து கூடலூருக்கு தினமும், இருமுறை வந்து செல்லும் வகையில், 22 எண் கொண்ட அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவுதை தடுக்க, பொதுமுடக்கம் அமலில் இருந்ததால், அரசு பஸ் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, 22 எண் கொண்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X