தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கார்த்திகா தலைமையில், தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் வரும், 17ல் தேசிய போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கவுள்ளது. இதில், ஒரு லட்சத்து, 48 ஆயிரத்து, 443 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கிராம பகுதிகளில், 964, நகராட்சியில், 20 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 18 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரத்துறையினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளி கல்வித்துறை, ஊரக மற்றும் உள்ளாட்சி, வருவாய்த்துறையினர், ரோட்டரி சங்கத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் என, 4,083 பேர் ஈடுபடவுள்ளனர். வரும், 17ல் நடக்கும் முகாமில், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட பஞ்., குழு தலைவர் யசோதா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தர்மபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE