கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் காசி. இவர் மகள் திவ்யா, 19, பிளஸ் 2 முடித்துவிட்டு, மத்தூரில் துணிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு வீட்டை விட்டு சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. இது குறித்து திவ்யாவின் அண்ணன் கோவிந்தராஜ், மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தன் தங்கை திவ்யாவை, ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் காலனியை சேர்ந்தவரும், மத்தூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவருமான திருநாவுக்கரசு, 29, ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து என் தங்கையை மீட்டுத்தர வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE