கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, மகாராஜகடை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்களை நியமிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சரவணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், சுரேஷ்குமார், ரஜினி மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டி.எஸ்.பி., சரவணன் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், பொதுமக்களுடன் நட்புறவை ஏற்படுத்தவும், குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், சந்தேகப்படும்படியான நபர்களை உடனடியாக தெரியப்படுவதற்கு வசதியாக, ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கிராமங்களில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டி குற்ற சம்பவம் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE