பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். இதில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்டத்தில், 1,863 ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். இதில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் வள்ளலார் ஆய்வு மேற்கொண்டார். இதில், மாவட்டத்தில், 1,863 ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும், 20ல் வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே, வாக்களிக்கும் முக்கியத்துவம், சுதந்திரமாக வாக்களிக்க இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். அனைத்து ஓட்டு சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று தாசில்தார்கள், ஆர்.ஐ.,கள், வி.ஏ.ஓ.,க்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/ மற்றும் www.elections.tn.gov.in மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும், தங்கள் பெயரை சேர்த்து கொள்ள வேண்டும் என, வள்ளலார் தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சதீஷ், தாசில்தார் பாலசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X