கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, நியூ கிராமிய பேண்டு இசை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு பேரணி, சங்கத்தின், 13ம் ஆண்டு துவக்க விழா மற்றும் தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என, முப்பெரும் விழா நேற்று நடந்தது. காலை, 7:30 மணிக்கு கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவிலில், தியாகராஜ சுவாமி ஆராதனை மங்கள இசையுடன் துவங்கியது. 11:00 மணிக்கு பழையபேட்டை காந்திசிலை அருகில், கொரோனா விழிப்புணர்வு பேரணி துவங்கியது. இதில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பேண்டு, நாதஸ்வரம், பம்பை கருவிகளை வாசித்தபடி, ஊர்வலமாக சென்றனர். கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவிலில் ஊர்வலம் முடிந்தது. அங்கு தியாகராஜ சுவாமிக்கு ஆராதனை விழா நடந்தது. சாக்ஸ்போன் கலைஞர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE