பொது செய்தி

தமிழ்நாடு

'அரசியல் மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர்'

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''புதிய அரசியல் மாற்றத்திற்கு, மக்கள் தயாராகி விட்டனர்,'' என, நடிகர் கமல்ஹாசன் பேசினார்.மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு, 8:30 மணிக்கு கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியன் பில்லர் தன்னார்வ அமைப்பை சேர்ந்த மணிவேல் தலைமையில், 100 பேர் மக்கள் நீதி மையத்தில் இங்கு இணைந்துள்ளனர். கோடை காலத்தில்,

கிருஷ்ணகிரி: ''புதிய அரசியல் மாற்றத்திற்கு, மக்கள் தயாராகி விட்டனர்,'' என, நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று இரவு, 8:30 மணிக்கு கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியன் பில்லர் தன்னார்வ அமைப்பை சேர்ந்த மணிவேல் தலைமையில், 100 பேர் மக்கள் நீதி மையத்தில் இங்கு இணைந்துள்ளனர். கோடை காலத்தில், இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீர்க்கப்படவில்லை. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பட வேண்டும். கற்கால மனிதர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், சான்றுகள் சிதைந்துள்ளன. அதை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. சினிமாக்காரனை பார்க்க, மக்கள் கூட்டம் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். இங்கிருக்கும் நீங்கள் படம் பிடித்து அதை காட்டுங்கள். இது மக்கள் கூட்டம் அல்ல. தமிழ்நாட்டை மாற்ற வந்தக் கூட்டம். மக்கள் நீதி மையம் ஆட்சிக்கு வந்தால், நல்ல பல திட்டங்கள் வரும். புதிய அரசியல் மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர். தமிழ்நாட்டை சீரமைக்க வந்துள்ள கூட்டம் இது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், படித்த இளைஞர்கள், பிறருக்கு வேலை கொடுக்க வேண்டிய அளவுக்கு வாழ்க்கை தரம் உயரும். வீட்டிற்கு ஒரு கணினி வழங்குவோம். இது மக்களின் தேவைகளை, அரசுக்கு தெரிவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் ஓசூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X