பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார ஆணைய உறுப்பினராக அழைப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தில், மின் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. ஆணைய தலைவராக, சந்திரசேகரும், சட்ட உறுப்பினராக வெங்கடசாமியும் உள்ளனர். மற்றொரு உறுப்பினராக இருந்த, பிரபாகர் ராவ், டிச., 24ல் ஓய்வு பெற்றார். அந்த இடம் காலியாக உள்ளது. புதிய உறுப்பினரை நியமிக்க,

சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தில், மின் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. ஆணைய தலைவராக, சந்திரசேகரும், சட்ட உறுப்பினராக வெங்கடசாமியும் உள்ளனர். மற்றொரு உறுப்பினராக இருந்த, பிரபாகர் ராவ், டிச., 24ல் ஓய்வு பெற்றார். அந்த இடம் காலியாக உள்ளது. புதிய உறுப்பினரை நியமிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில், தமிழக அரசு, 2020 அக்., 7ல், குழு அமைத்தது. இந்நிலையில், காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கு, இன்ஜினியரிங், நிதி, வணிகம், பொருளாதாரம், மேலாண்மை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், வரும், 25ம் தேதி மாலை, 3:00 மணி வரை, 'முதன்மை செயலர், எரிசக்தி துறை, தலைமை செயலகம், சென்னை -- 9 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசின் எரிசக்தி துறைஅறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X