படித்தவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், தொழில் அதிபர்கள் என, பார்த்துப் பார்த்துத்தான், கட்சியின் நிர்வாகிகளை, கமல் நியமித்தார். ஆனாலும், பொதுச் செயலர் பதவியில இருப்பவர்கள், அவர்களுக்குள் மோதிக்கிட்டு இருக்காங்களாம்... கட்சியில் புதிதாக இணைந்ததும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபுவுக்கு, பொதுச் செயலர் பதவி கொடுத்தது மற்றவர்களுக்கு பிடிக்கலையாம்... பொது செயலரா இருந்த அருணாசலம், திடுமென, பா.ஜ.,வுக்கு தாவிய பின்னணி இதுதானாம்...!
‛ஆர்.எஸ்.எஸ்., பாணியில வேலை செய்யுங்க...!

பா.ம.க., தலைவர் ராமதாஸ், இணைய வழி கானொலி காட்சி மூலமா, கட்சியின் பொதுக் குழுவை நடத்தினார். அப்போது, வருத்தத்துடன் பல விஷயங்களை நிர்வாகிகளிடம் பேசினார். ‛கட்டமைப்பில் கட்சி வலிமையாக இருந்தாலும், தேர்தல்ல, பா.ம.க., தோற்பதற்கு, சரியான பிரசார வழிமுறைகள் இல்லாததுதான் காரணம்'னு கூறியுள்ளார். ‛அகில இந்திய அளவுல, பா.ஜ., இன்னைக்கு ஜெயிக்குதுன்னா , அதுக்கு பின் புலத்தில இருக்குற, ஆர்.எஸ்.எஸ்.,சின் தேர்தல் பணி தான் காரணம்... அவங்க எப்படி தேர்தல் வேலைகளை செய்றாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அதை பின்பற்றுங்க... நாமளும் ஜெயிக்கலாம்'ன்னு, ராமதாஸ் சொன்னாராம்...!
‛இது தான் தி.மு.க., தந்த ஏற்றமா?'
‛தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் கானொலி காட்சி மூலமா, ஸ்டாலின் பேசினார். ‛தி.மு.க.,விலதான், சமூக நீதி பின்பற்றப்படுகிறது... ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றம் தரும் கட்சி, தி.மு.க., தான்'னு, ஸ்டாலின் பேசினார். இதை, சமூக வலைத்தளங்களில் கடுமையகாக விமர்சனம் செய்துள்ளனர். ‛தி.மு.க.,வுல, 77 மாவட்டங்கள் உள்ளது. அதில், இரண்டு பேர்தான், தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதுதான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., தந்திருக்கிற ஏற்றமா'ன்னு, காரசாரமா கேட்டு இருக்காங்க...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE