பொது செய்தி

இந்தியா

தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி கொலைக்கு சமம்: மத்திய அரசும் கடும் எதிர்ப்பு

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுச்சேரி : தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது, தற்கொலை அல்ல கொலைக்கு சமமானது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பரவல், 1,௦௦௦க்கு கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில், மரபணு மாற்றம்
TNTheatres, Theatres, Master, Eeswaran, actorvijay, SilambarasanTr,

புதுச்சேரி : தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது, தற்கொலை அல்ல கொலைக்கு சமமானது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பரவல், 1,௦௦௦க்கு கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதற்கிடையே, பிரிட்டனில், மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகம் வந்த, 24 பேருக்கு, கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த, 20 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில், நான்கு பேர், மரபணு மாறிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அரசு எதிர்ப்புஇந்த நிலையில் தமிழக அரசு 100 சதவீதமாக அனுமதி்த்து குறித்து மத்திய அரசின் உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதம், தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், திரையரங்குகளில், 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கலுக்கு புதிய படங்கள் வெளியாவதை தொடர்ந்து, அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும், தேசிய தொற்று நோய் பரவியல் விஞ்ஞானி, பிரதீப் கவுர், 'டுவிட்டர்' பதிவில், 'தனிமனித இடைவெளி இல்லாமல், மூடிய அரங்கில் இருந்தால், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும். இத்தகைய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். மேலும் திரைப்பிரபலங்கள் சிலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.latest tamil news
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 'பேஸ்புக்' பதிவு : அன்புக்குரிய நடிகர்கள் விஜய், சிலம்பரசன் மற்றும் தமிழக அரசுக்கு... என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என, கொரோனா முன்கள பணியாளர்கள், தற்போதைய சூழலில் சோர்வடைந்து இருக்கிறோம்.
எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பெருந்தொற்று பாதிப்பில் இருக்கிறோம். இந்த அசாதாரணமான சூழலில், தொற்றை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனாலும், முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. இதில், வேடிக்கை என்னவென்றால், ஆட்சியாளர்களோ, அரசியல் தலைவர்களோ, நடிகர்களோ, மக்களோடு, மக்களாக கூட்ட நெரிசலில் படம் பார்க்க, திரையரங்கம் செல்லப் போவதில்லை. எனவே, பணத்திற்காக, மனித உயிர்களை பணயம் வைக்க வேண்டாம். இந்த அனுமதியை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.


இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
06-ஜன-202122:43:46 IST Report Abuse
Ashok Subramaniam தமிழக அரசு சினிமாக்காரர்களென்றால் இந்த அளவுக்கு வளைந்து கொடுக்கவேண்டிய கட்டாயம்தான் என்ன? வோட்டுக்குப் பயந்தா? அல்லது இதிலும் ஏதேனும் கையூட்டுப் பெறப்பட்டதா? நூறு விழுக்காடு அனுமதியென்றால், அதனால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டால், விஜயோ, சிம்புவோ பொறுப்பேற்பார்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் மருத்துவச் செலவை ஏற்பார்களா? மரணங்கள் ஏற்பட்டால், தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காகத் தண்டனையை ஏற்றுக்கொள்வார்களா? இதே குற்றத்துக்காக தமிழக அரசும், தமிழக முதல்வரும் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படலாமா? கூத்தாடிக் கும்பல் கொடி தூக்குவதும் கோமாளி அரசு குடை பிடிப்பதும் உச்சபட்ச பொறுப்பின்மை ஆட்சியின் கேடு.. மக்கள் இத்தகைய முயற்சிகளை நிராகரிக்க வேண்டும்
Rate this:
Cancel
raguram - madurai,இந்தியா
06-ஜன-202119:56:18 IST Report Abuse
raguram நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தியட்டர் ஓனர்கள் குடுமபத்துடன் முதல் 5 நாட்கள் ,ரசிகர்களுடன் படம் பார்க்கட்டுமே.
Rate this:
Cancel
Murugan -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜன-202119:55:08 IST Report Abuse
Murugan விஜய் ,சிம்பு மற்றும் அனுமதி அளித்த அனைவரும் தியேட்டரில் தங்களது பாடத்தை ரசிகர்களுடன் அமர்ந்து குடும்பத்துடன் படம் பார்க்க தயாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X