பெங்களூரு:அர்ச்சகர்கள், புரோகிதர்களை திருமணம் செய்து கொள்ள முன் வரும், மணப்பெண்ணுக்கு, 'மைத்ரி' திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் ரூபாய் பத்திரம் வழங்க, கர்நாடக பிராமண அபிவிருத்தி ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, பிராமண அபிவிருத்தி ஆணைய தலைவர், சச்சிதானந்தா கூறியதாவது:சமீப காலமாக, அர்ச்சகர்கள், புரோகிதர்களை திருமணம் செய்துகொள்ள, பெண்கள் தயங்குவது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.இதை மனதில் கொண்டு, அர்ச்சகர்கள், புரோகிதர்களை திருமணம் செய்து கொள்ள, முன் வரும் மணப்பெண்களை, ஊக்கப்படுத்தும் வகையில், முதன் முறையாக, 'மைத்ரி' திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் ரூபாய் பத்திரம் வழங்கப்படும்.மூன்று ஆண்டுக்கு பின், பயனாளிகள், பணத்தை பெறலாம்.இத்திட்டத்தை முதல்வர் எடியூரப்பா, இன்று துவக்கி வைக்கிறார்.
இது போன்று, ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய்; ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ளோருக்கு, போர்வெல் தோண்ட, டிராக்டர் வாங்க, பால் உற்பத்தி தொழில் துவங்க, நிதியுதவி வழங்கப்படுகிறது.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்தின், மூன்று பிராமண மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது, மூன்றாவது இடம் பெற்ற மாணவர்களுக்கு, முறையே, 10 ஆயிரம் ரூபாய், 5,000 ரூபாய்.பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE