பெங்களூரு: ஊரில் இல்லாத போதும், தங்களின் வாகனங்களுக்கு, போக்குவரத்து போலீசார், அபராதம் விதிப்பதாக, சமூக வலைதளம் மூலம் அதிருப்தி வெடித்துள்ளது.
பெங்களூரு பானஸ்வாடி, ஆயில் மில் சாலையில், மருத்துவமனை அருகில், தனியார் நிறுவன ஊழியர் ஆசிஷ்ஸ்ரீவாத்சவ் என்பவர், பைக் நிறுத்திய தவறுக்கு, அபராதம் செலுத்தும் படி, போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.ஆனால், பைக் நிறுத்தியதாக கூறப்படும் நாளன்று, ஆஷிஷ் ஸ்ரீவாத்சவ், தமிழகம் ஊட்டிக்கு, சுற்றுலா சென்றிருந்தார்.போலீசாரின் நோட்டீசால், அதிர்ச்சியடைந்த அவர், '2019 ஜூன் 1ல், நான், பெங்களூரிலேயே இல்லை. பைக்கில் ஊட்டி சென்றிருந்தேன். 'ஆனால், போக்குவரத்து விதிகளை மீறியதாக, எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது' என, விவரித்து, ஊட்டியில் எடுத்த போட்டோக்களை, சமூக வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதே போன்று, போக்குவரத்து விதிகளை மீறியதாக, தீப் ஜோஷ் சிங் என்பவருக்கும், நோட்டீஸ் வந்துள்ளது. ஆனால், போலீசார் குறிப்பிட்ட நாளில், வெளிநாட்டில் இருந்தார். அவரது பைக், உத்தரகாண்ட்டில் இருந்தது.இது பற்றி, சமூக வலைதளத்தில், விவரித்த தீப் சிங் ஜோஷ், 2017ல், நான் வெளிநாட்டில் இருந்தேன். பைக்கும் வெளி மாநிலத்தில் இருந்தது. நான் விதிகளை மீறியதாக, நோட்டீஸ் வந்துள்ளது. இப்பிரச்னையிலிருந்து, நான் எப்படி விடுபடுவது என, ஆலோசனை கூறுங்கள், என போலீசாரின் காலை வாரியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE