பொது செய்தி

தமிழ்நாடு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலர்

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் என 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஜன.,13ம் தேதி விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
CovidVaccine, Tamilnadu, Above18, Radhakrishnan, CoronaVirus, கொரோனா, தடுப்பூசி, தமிழகம், சுகாதாரத்துறை, செயலாளர், ராதாகிருஷ்ணன், ஒத்திகை,

சென்னை: சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் என 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஜன.,13ம் தேதி விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜன.,8 ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும்.

இந்தியாவில் இந்தமாதம் 13ம் தேதி கொரோனா தடுப்பூசி விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். வரும் 8 ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும். சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படும் என்றார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் போடப்படும் பின்னர் அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என ராதாகிருஷ்ணன் கூறினார்.


latest tamil news


சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படவுள்ளது. மொத்தம் 2 கோடி தடுப்பூசி பதப்படுத்தி வைக்கும் வசதி தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
06-ஜன-202119:39:22 IST Report Abuse
Visu Iyer கொரானா நீ யார் பெத்த பிள்ளையோ.. உன் பெயரை சொல்லி அவுங்க வாழ(ஆளு)றாங்க..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
06-ஜன-202119:38:06 IST Report Abuse
Visu Iyer தடுப்பூசி போட்டாலும் நிச்சயமாக கொரானா வராது என்பதற்கு உத்திரவாதம் இருக்குதான்னு கேளுங்க...
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
06-ஜன-202117:16:34 IST Report Abuse
மன்னிப்பு நல்லது நடக்கட்டும். கொரானா ஒழியட்டும். மோடியின் சேவை தொடரட்டும். போற்றுவோர் போற்றட்டும்.தூற்றுவோர் தூற்றட்டும்.புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும். தொடர்ந்து சொல்வோம். தடுப்பூசி என்ன பிரியாணி செய்யுறது மாதிரி செய்யமுடியுமா?. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். மோடிய யாரும் பாராட்ட வேண்டாம். இங்கு பலருக்கு அதை படித்ததும் கொரானா வந்தது போல இருக்கும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
06-ஜன-202119:56:54 IST Report Abuse
Visu Iyerபோற்றுவோர் யாருமே இல்லையே.. யாரும் பாராட்ட வேண்டாம் என்று சொல்றீங்க. யாரோ பாராட்ட ரெடியா இருப்பது போல......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X