பெங்களூரு:புற்று நோயாளிக்காக, கன்னட நடிகை காருண்யா ராம், தனது கூந்தலை தானமாக வழங்கியுள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகை காருண்யா ராம், 27. இவர், 2011 ல், 'மத்தொந்து மதுவேனா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம், சாண்டில்வுட்டில் அடியெடுத்து வைத்தார்.மைசூரில் படப்பிடிப்பில் பங்கேற்ற பின், பெங்களூரு வந்த அவர், ஆங்கில புத்தாண்டிலிருந்து ஆக்கபூர்வமான பணிகள் செய்ய திட்டமிட்டார். இதற்காக, 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தலைமுடியை இழந்தவர்களுக்கு, 'விக்' செய்யும், 'பெங்களூரு ஹேர் டொனேஷன்' சங்கத்தை தொடர்பு கொண்டார்.இதையடுத்து, தனது தலைமுடியில், 14 அங்குலம் அளவிற்கு கூந்தலை, தானமாக வழங்கியுள்ளார்.
இதனை தனது, இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்து, ''2021ல் ஆக்கபூர்வமாக, உதவும் வகையில், எனது தலை முடியில், 14 அங்குலம் கூந்தலை வழங்கியுள்ளேன். இம்முடி வளர, மூன்று ஆண்டுகளாகும்.''இந்திய பெண்களுக்கு கூந்தல் என்பது முக்கியமானது. பெண்ணை அழகாக காண்பிப்பது தலை முடியும் ஒன்றாகும். எனது தலை முடியை, புற்றுநோயாளிக்கு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் உடல்நலம் பெற வேண்டுகிறேன்.''எனது முடிவை, பல பெண்கள் வரவேற்று, அவர்களும் தானம் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன், நடிகர் துருவா சர்ஜா, தனது, 'பொகுரு' திரைப்படத்துக்காக வளர்த்திருந்த முடியை, புற்று நோயாளிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE