புதுடில்லி : ஐ.எல். அண்ட் எப்.எஸ்., நிறுவன மோசடி வழக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த போலி நிறுவனத்தின், 452 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
டில்லியை சேர்ந்த, ஐ.எல். அண்ட் எப்.எஸ்., என்ற கட்டுமானம் மற்றும் நிதி சேவைகள் அளிக்கும் நிறுவனம் மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த, 2019ல், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.இவ்வழக்கு தொடர்பாக, அந்நிறுவன இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர், கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரில், ஏ.எஸ்., கோல் என்ற பெயரில், போலி நிறுவனத்தை துவங்கி, அந்த நிறுவனத்தின் பெயரில், ஐ.எல். அண்ட் எப்.எஸ்., நிறுவனம் வாங்கிய, 452 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE