பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்கள் குறைய சி.சி.டி.வி., கேமராக்கள்! எஸ்.பி., அழைப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ''கிராமங்களில் குற்றங்கள் குறைய, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்,'' என எஸ்.பி., அருளரசு பேசினார்.சிறுமுகையை அடுத்த ஆலாங்கொம்பில், கிராமக் கண்காணிப்பு காவல் அலுவலர் பணி நியமன விழா நடந்தது. கோவை எஸ்.பி., அருளரசு தலைமை வகித்து பேசியதாவது:கிராமங்களில் குற்றங்களை தடுக்கவும், போலீசார் மீது நல்ல எண்ணங்கள் ஏற்படவும், இது மாதிரியான கிராம
 குற்றங்கள் குறைய சி.சி.டி.வி., கேமராக்கள்! எஸ்.பி., அழைப்பு

மேட்டுப்பாளையம் : ''கிராமங்களில் குற்றங்கள் குறைய, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்,'' என எஸ்.பி., அருளரசு பேசினார்.
சிறுமுகையை அடுத்த ஆலாங்கொம்பில், கிராமக் கண்காணிப்பு காவல் அலுவலர் பணி நியமன விழா நடந்தது. கோவை எஸ்.பி., அருளரசு தலைமை வகித்து பேசியதாவது:
கிராமங்களில் குற்றங்களை தடுக்கவும், போலீசார் மீது நல்ல எண்ணங்கள் ஏற்படவும், இது மாதிரியான கிராம கண்காணிப்பு காவலர் நியமிக்கப்படுகின்றனர். இவர், வாரம் இருமுறை, அந்தந்த கிராமங்களுக்கு வந்து செல்வார். அவரிடம், போலீஸ் சம்பந்தமான பல்வேறு சந்தேகங்கள், உதவிகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், அவசியம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதனால் அவர்கள் குடும்பத்தினர் பாதுகாக்கப்படுகின்றனர். வாகன விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாயும், எலும்பு முறிவு ஏற்பட்ட குடும்பத்துக்கு, 50 ஆயிரம் ரூபாயும், போலீஸ் துறை சார்பில் பெற்று தரப்படும் என்ற தகவலை தெரிந்து கொள்ள வேண்டும்.உங்கள் மொபைல் போன் எண்ணை சிலர் தொடர்பு கொண்டு, வங்கிகளிலிருந்து பேசுவதாக தெரிவிப்பவர். அவர்கள், உங்களின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., ரகசிய எண் ஆகியவற்றை கேட்பார்கள். பொதுமக்கள் யாரும், எந்த தகவல்களையும், அவர்களிடம் தெரிவிக்க வேண்டாம். வங்கிகளில் இருந்து, ஒருபோதும், யாரும் இதுபோன்ற தகவல்களை கேட்க மாட்டார்கள். மேலும் கிராமங்களில் நடக்கும் குற்றங்களை குறையவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும், அந்தந்த கிராமங்களில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாங்கொம்பு, ராமம்பாளையம், தொட்டபாவி, மாதனூர் ஆகிய கிராமங்களுக்கு, நந்தகுமார் என்ற போலீசார் நியமிக்கப்பட்ட விளம்பர பலகையை, எஸ்.பி., அருளரசு திறந்து வைத்தார். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் வரவேற்றார். ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஐ., முனுசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X