பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவிப்பு அமல்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : காலிங்கராயன் குளத்தில், ரூ.5.65 கோடி மதிப்பில் பணி துவங்குமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது காலிங்கராயன் குளம். இது, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தில் நீர் நிரம்பினால், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி, அக்ரகார சாமக்குளம் ஊராட்சி என பல பகுதிகளில், பல நூறு ஏக்கர்

கோவில்பாளையம் : காலிங்கராயன் குளத்தில், ரூ.5.65 கோடி மதிப்பில் பணி துவங்குமா என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தது காலிங்கராயன் குளம். இது, 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தில் நீர் நிரம்பினால், எஸ்.எஸ். குளம் பேரூராட்சி, கொண்டையம்பாளையம் ஊராட்சி, அக்ரகார சாமக்குளம் ஊராட்சி என பல பகுதிகளில், பல நூறு ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். குளத்திற்கு மழைநீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குளத்தின் கரைகள் ஒழுங்கற்று இருந்தன.
கடந்தாண்டு, கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு சங்கம் ஏற்படுத்தப்பட்டு, 12 நீர்நிலை அமைப்புகள் ஒன்று சேர்ந்து, ஓராண்டாக கரைகளை ஒழுங்குபடுத்தி மரக்கன்றுகள் நட்டு துார்வாரும் பணி மேற்கொண்டு வருகின்றன. இந்த குளத்தை, கோவை மாவட்டத்திலேயே முன்மாதிரி குளமாக உருவாக்க, பறவைகள் சரணாலயம் அமைத்து, கரைகளை ஒழுங்குபடுத்த, 5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 'இது குறித்து, கடந்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், 'காலிங்கராயன் குளம் சீரமைப்பு பணி, 5.65 கோடி ரூபாயில் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'தற்போது குளத்தில், 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. 5.65 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றால், இந்த வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய பரப்பு அதிகரித்து, கால்நடை வளர்ப்பும் அதிகரிக்கும். குடிநீர் பிரச்சினையும் தீரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X