பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி இடத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, கீரம்பூர் ஊராட்சியில் அகற்றப்பட்ட, 'டிவி' அறையை மீட்டுத் தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் கிராமத்தில், புறம்போக்கு நிலத்தில் ஊராட்சியின் மூலம் கட்டப்பட்ட, 'டிவி' அறை, 25 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது, யாருக்கும் தெரியாமல் தனியாருக்கு

நாமக்கல்: நாமக்கல் அடுத்த, கீரம்பூர் ஊராட்சியில் அகற்றப்பட்ட, 'டிவி' அறையை மீட்டுத் தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், கீரம்பூர் கிராமத்தில், புறம்போக்கு நிலத்தில் ஊராட்சியின் மூலம் கட்டப்பட்ட, 'டிவி' அறை, 25 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது, யாருக்கும் தெரியாமல் தனியாருக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலம், தற்போது கிரயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி அறையை எந்த ஒரு முன் அனுமதியும் இன்றி பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து, பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த சுவற்றை நீக்கி, பழையபடி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து, நேற்று காலை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X