குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, வடிகால் அமைக்கும் பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார். குமாரபாளையம் அடுத்த, கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், சோதனை ஓட்டத்திற்காக பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்று, சர்வீஸ் சாலையின் இருபுறமும் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கலெக்டர் மெகராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணி ஏறத்தாழ நிறைவு பெற்ற நிலையில், வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், கோட்டைமேடு பக்கமிருந்து வரும் கழிவுநீர், சர்வீஸ் சாலையின் கீழ் பகுதியில் செல்ல பாதை அமைக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறி, அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE