பொது செய்தி

தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்படும்: மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: ''உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பணிகள் தொடங்கின. சில சங்கங்கள் பேசாமல் இருந்து விட்டு, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி அரசாணைப்படி நிதி கிடைக்கவில்லை என சொல்லி இருக்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.நாமக்கல் மாவட்டம்,

திருச்செங்கோடு: ''உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பணிகள் தொடங்கின. சில சங்கங்கள் பேசாமல் இருந்து விட்டு, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி அரசாணைப்படி நிதி கிடைக்கவில்லை என சொல்லி இருக்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக எண்ணிக்கை உள்ளதால், இந்த ஆண்டு, 6,000 பேருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் எலச்சிபாளையம் ஒன்றியங்கள், பரமத்தியில் பாதிப்பகுதிக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆய்வுப்பணிக்கு உத்தரவிட்டுள்ளார். உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தொடர்பாக, விவசாயிகள் தொடர்ந்து சில கோரிக்கைகள் வைத்துக் கொண்டுள்ளனர். அதற்கு, சட்டசபையில் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி இருக்கிறேன். உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு, முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பணிகள் தொடங்கின. சில சங்கங்கள் இது நாள் வரை பேசாமல் இருந்து விட்டு, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி அரசாணைப்படி நிதி கிடைக்கவில்லை என சொல்லி இருக்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, கரூரில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில், அமைச்சர்களின் ஊழல் குறித்த இரண்டாவது பட்டியலை கவர்னரிடம் கொடுக்க போவதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ''அவர் டில்லியிலேயே புகார் கொடுக்கட்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X