நாமக்கல்: நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், நேற்று இரவு, 7:00 மணிக்கு, சேந்தமங்கலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இண்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் டிரைவர் மற்றும் இரண்டு பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், டிராவல் பேக்கில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றை சோதனை செய்தில், மேலும், கீழும், 100 ரூபாய் அசல் நோட்டும், மற்றது அனைத்தும், வெள்ளைத் தாளாக இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். விசாரணையில், சேந்தமங்கலத்தை சேர்ந்த பாஸ்கரன், 25, மணிமாறன், 45 என்பது தெரிய வந்தது. மேலும், கடன் கேட்பவர்களுக்கு, அசல் ரூபாய் நோட்டுகளுடன், வெள்ளைத் தாளை இணைத்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என, தெரிகிறது. அவர்களை இருவரையும் கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூபாய் நோட்டு கட்டில், 60 நோட்டுகள் மட்டுமே, ஒரிஜினல், 100 ரூபாய் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE