குளித்தலை: குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில், சப்- கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமானிடம் கொடுத்த மனு விபரம்: குளித்தலையில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பஸ் ஸ்டாண்ட், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள இடத்தில் இடப்பற்றாக்குறை இருப்பின் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். குளித்தலை நகரானது வருவாய் கோட்ட தலைமை நகரமாக உள்ளது. பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள் உள்ளன. எனவே, குளித்தலை சுற்றுப் பகுதி பொது மக்கள் நலன் கருதி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE