ஜெனிவா: கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் குழுவுக்கு சீனா அனுமதி மறுத்ததால் உலகச் சுகாதார அமைப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
சீனாவின் வூஹானில் 2019ம் ஆண்டு டிசம்பரில் கொடிய கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த தொற்றால், இதுவரை 8.68 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 18 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மனிதனிலிருந்து மனிதருக்கு பரவும் கொடிய தொற்று வைரஸ் வகை என்பதை உலக நாடுகளிடமிருந்து சீனா மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இதனையடுத்து, கொரோனா வைரஸ் எங்கு துவங்கியது எப்படி துவங்கியது என்பதை ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் 10 நிபுணர்கள் கொண்ட குழு சீனா சென்று விசாரிக்கவிருந்தது.

நிபுணர்கள் குழு சீனாவுக்கு புறப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டிற்குள் நுழைய சீனா அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில், 'சீனாவுக்குள் நிபுணர்கள் குழு நுழைவதற்கு சீனா அனுமதி தரவில்லை என்பதை அறிகிறோம். இந்தச் செய்தி எனக்கு பெரிய ஏமாற்றமளிக்கிறது. சீனா உறுதியளித்து பின்வாங்கியுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE