குளித்தலை: நபார்டு வங்கியின் சார்பில், சுக்காம்பட்டி கிராமத்தில் வயல்வெளி தின விழா நடந்தது. குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., புதூர் சுக்காம்பட்டியில் நபார்டு வங்கியின் சார்பில் வயல்வெளி தினவிழா நடந்தது. இந்த தொழில்நுட்பத்தை பரவலாக்கம் செய்ய நடந்த வயல்வெளி தின விழாவில், துவரையில் உயிர் மக்கா பயன்படுத்தி மண்ணின் வளத்தை அதிகரித்தல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் மாரிக்கண்ணு, தமிழ்செல்வி, திட்ட உதவியாளர் (தொழில் நுட்பம்) கருப்பசாமி ஆகியோர் மண்ணின் வளத்தை அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்த ஆய்வு, புதூர் சுக்காம்பட்டி கிராமத்தில், மானாவாரியாக துவரையை சாகுபடி செய்து வரும் விவசாய நிலத்தில் மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், பயிரின் மகசூலை அதிகரிப்பதிலும் உயிர் மக்கா பங்கு குறித்து மேற்கொள்ளப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE