மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: உபி., மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த சட்டம், சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இரண்டு மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.உ.பி.,யில், திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும்
லவ்ஜிகாத், மதமாற்ற தடை சட்டம், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், தடை, மறுப்பு

புதுடில்லி: உபி., மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், அந்த சட்டம், சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இரண்டு மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில், திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரகாண்ட் அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் விஷால் தாக்ரே, தொண்டு நிறுவனம் ஒன்று மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil news
இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை நாடும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி யு சிங், பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று சட்டம் இயற்றப்படுவதால், உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மாநிலங்களின் கருத்தை ஏற்காமல்,எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இந்த சட்டம், அரசியல்சாசனப்படி செல்லுபடியாகுமா என விசாரிக்க ஒப்பு கொண்டதுடன், உ.பி., மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
06-ஜன-202123:30:30 IST Report Abuse
muthu Muslim dupped in the name of Hindu and same e spoiled Hindu girl and converted to Muslim for marriage Again gave children and divorced because he is already married another Muslim girl. It happened in UP. Hence this law is essential and required
Rate this:
Cancel
Kannan - Allahabad,இந்தியா
06-ஜன-202122:40:49 IST Report Abuse
Kannan மதம் மாறுவது தவறு மனதை மாற்றுங்கள்
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
06-ஜன-202121:00:06 IST Report Abuse
Indian  Ravichandran எத்தர்களுக்கு பித்தர்கள் பரவாயில்லை போல எதுக்கெடுத்தாலும் ஒரு தடை கேட்டு ஒரு வழக்கு. தடை தேவை இல்லை மதமாற்றம் என்பது ஒரு வியபாரம் அப்புறம் சமநிலையை கெடுக்கும் சதி. அனைவருக்கும் ஒரே சட்டம் தேவை ஜாதி சான்று கூடாது சிறுபான்மை சலுகை கூடாது. ஒரே சட்டம் அனைவருக்கும் ஒரே மரியாதை இது வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X