அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக., பெண்களின் எதிரியா?: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: பொள்ளாச்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அதிமுக.,வில் அங்கம் வகிப்பதால், அக்கட்சி பெண்களுக்கு எதிரியாக உள்ளதாக திமுக., தரப்பில் #பெண்களின்_எதிரி_அதிமுக என்னும் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழகத்தை பரபரப்பாக்கிய
பெண்களின்_எதிரி_அதிமுக, டுவிட்டர், டிரெண்டிங், அதிமுக

சென்னை: பொள்ளாச்சி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் அதிமுக.,வில் அங்கம் வகிப்பதால், அக்கட்சி பெண்களுக்கு எதிரியாக உள்ளதாக திமுக., தரப்பில் #பெண்களின்_எதிரி_அதிமுக என்னும் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2019ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழகத்தை பரபரப்பாக்கிய சம்பவம் நடந்தது. கல்லூரி மாணவியை மிரட்டி சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தனர். இதில், ஒரு மாணவி அவர்களிடம் கதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் என 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


latest tamil news


கோவை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த பாலியல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிமுக.,வை சேர்ந்த சில பிரமுகர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்படாமல் இருக்கின்றனர் எனத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹேரன் பால் (29), பாபு(எ) பைக் பாபு (27), அருளானந்தம் (34) ஆகிய மேலும் 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

இதில், அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், பொள்ளாச்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மீதமுள்ள இருவரும் அதிமுக.,வில் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அருளானந்தம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த செய்தி பரபரப்பான நிலையில், ஆளும் அதிமுக.,வினரே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களில் தொடர்புடையதை எதிர்க்கட்சியான திமுக., சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகிறது.


latest tamil news



#பெண்களின்_எதிரி_அதிமுக என்னும் ஹேஸ்டேக்கில், அதிமுக.,வினர் செய்த பெண்களுக்கு எதிரான சம்பவங்களை திமுக.,வினர் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சிலர், 'தமிழ் நாளிதழ்களில் முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியான முழுபக்க விளம்பரங்களில், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என குறிப்பிட்டால் மட்டும் போதாது, அக்கட்சியினர் பெண்களின் பாதுகாப்பை செயலில் காண்பிக்க வேண்டும்,' எனவும், சிலர் பாலியல் வழக்குகளில் அதிமுக.,வினர் கைது என்பதை குறிப்பிட்டு, 'இதை தான் பெண்களின் பாதுகாப்பு என்கிறார்களோ' எனவும் பதிவிட்டுள்ளனர்.


latest tamil news



கைது செய்யப்பட்ட அருளானந்தம், அமைச்சர் வேலுமணியுடன் இருக்கும் பல படங்களையும், சமீபத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் இணைந்து கலந்துக்கொண்ட படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர். 'அதிமுக.,வில் உள்ள அருளானந்தம் போன்றோர்களால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,' எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர். இதனால், #பெண்களின்_எதிரி_அதிமுக என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
07-ஜன-202113:13:36 IST Report Abuse
Arun Kumar பாஜக + அதிமுக கூட்டணி..
Rate this:
Cancel
makesh - kumbakonam ,இந்தியா
07-ஜன-202112:29:17 IST Report Abuse
makesh கடந்த இரண்டு வருடமாக இந்த குற்றவாளிகளை காப்பாற்றியதே அதிமுக அரசுதான் ...
Rate this:
LAX - Trichy,இந்தியா
07-ஜன-202117:38:01 IST Report Abuse
LAXஏன் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் (அரசாங்கம் காப்பாற்றிக் கொண்டிருப்பவரை) காட்டிக்கொடுத்திருக்கலாமே..? அவர்களெல்லாம் கட்சி பேதமில்லாமல், இவனின் வாடிக்கையாளர்களோ..?...
Rate this:
Cancel
Krish Swam - CHENNAI,இந்தியா
07-ஜன-202111:56:29 IST Report Abuse
Krish Swam பொள்ளாச்சி சம்பவத்தில் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். மாற்று கருத்து இல்லை. அதே சமயம் பெரம்பலூர் தீ மு க முன்னாள் எம் எல் எ ராஜ்குமார் 2012 இல் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காத திமுக பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேச தகுதி இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X