புதுடில்லி:ம.பி., மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் அகிவர்(38). கூலி தொழிலாளி. மனைவி சிவ்குமாரி(35). அரவிந்த் வேலைக்கு சென்றுவிட்டு தினமும் தாமதமாக வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால், அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே பிரச்னை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
இருப்பினும் கோபம் குறையாத சிவ்குமாரி, அதிகாலை 5 மணியளவில் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அரவிந்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக சிவ்குமாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது செயலுக்கு சிவ்குமாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக நிகழ்வு
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

* திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள்(71). தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் ரத்தினவேல், மனைவி , குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். தாய் மற்றும் மகன் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. மதுபோதையில், ரத்தினவேல், தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ரத்தினவேல் கீழே தள்ளியதில், பலத்த காயமடைந்த முத்தம்மாள், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர்.
*சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
* 103 கிலோ தங்கம் மாயமானது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் விசாரிப்போம் எனவும், நீதிமன்றம் அளித்த கால அவகாசப்படி வழக்கு விசாரணை முடிக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி., பிரதீப் வி. பிலிப் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE