அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் குறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்: முதல்வர் பழனிசாமி

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
ஈரோடு: திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பவானியில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக ஆட்சி தான். ஆனால் ஸ்டாலின் அதிமுக அரசு ஊழல் அரசு என்று சொல்லி வருகிறார். ஊழல் குறித்து ஸ்டாலினுடன்
TamilnaduCM, Palanisamy, ADMK, DMK, முதல்வர், பழனிசாமி, பிரசாரம், திமுக, அமைச்சர்கள், சிறை செல்வார்கள், ஸ்டாலின்

ஈரோடு: திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக ஆட்சி தான். ஆனால் ஸ்டாலின் அதிமுக அரசு ஊழல் அரசு என்று சொல்லி வருகிறார். ஊழல் குறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயார். திமுக ஆட்சியில் டெண்டர் படிவம் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே டெண்டரை வழங்கினார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் இ-டெண்டர் முறையில் யார் வேண்டுமானாலும் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை.


ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அதிமுக ஆட்சி மீது குறைசொல்ல ஒன்றுமில்லை என்பதால் இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சொல்கிறார். எந்த துறையில் ஊழல்; எங்கு அழைத்தாலும் விவாதத்துக்கு நான் ரெடி என சவால் விடுத்தார். திமுக முன்னணி தலைவர்கள் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன; விசாரணை முடிந்ததும் ஏப்ரல் மே மாதங்களில் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் சிறை சென்று விடுவார்கள் எனவும் முதல்வர் கூறினார்.

latest tamil newsதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், சுப.தங்கவேலன், ரகுபதி உள்ளிட்டோர் மீது 30 வழக்குகள் உள்ளன. இத்தனை ஆண்டுகளாக வாய்தா வாங்கிக்கொண்டிருந்தனர். இப்போது வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்போதுள்ள திமுக நிர்வாகிகள் பலரும் ஏப்ரல் மாதத்திற்குள் சிறைக்கு செல்வது உறுதி.


latest tamil news


திமுக குடும்ப கட்சியாக இருந்து கொண்டு வாரிசு அரசியல் நடத்துகின்றனர். வருகிற சட்டசபைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாத்தா, மகன், பேரன் என்று வரிசையாக வருகின்றனர். ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அதற்கு நானே சாட்சி. கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு திமுக துடிக்கிறது. விஞ்ஞான உலகில் மக்கள் இருப்பதை மறந்து ஸ்டாலின் பேசி வருகிறார். அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். அதனால் மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) கிளிபுள்ள இந்துமத விரோதி சுடலை கான் துண்டுசீட்டுல எழுதி குடுத்தத தானேப்பா வாசிப்பா
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
06-ஜன-202119:25:47 IST Report Abuse
ANTONYRAJ அடிக்கடி கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதாலோ என்னமோ திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அங்கு நடக்கும் சில நாடகங்கள் ஒட்டிக் கொண்டது போல் தெரிகிறது .இப்போதெல்லாம் அவர் ஊர் ஊராக போய் திராவிட கொள்கைகளை கூவி விற்கும் வியாபாரி போலாகிவிட்டார். எதாவது ஊருக்கு சென்று மரத்தடியில் ஜமுக்காளம் விரித்து மைக் சகிதம் மேடையில் அமர்வது அவர் ஸ்டைலாகிவிட்டது. அப்படி சில ஊர் பெயர் தெரியாமலே அவர் சென்று அமர்வது வேறுவிஷயம். அந்த திராவிட வியாபாரியான சுடலை சமீபத்தில் கலந்து கொண்ட போலி கிராம சபை நிகழ்வில், பெண்கள் கூட்டத்தில் இருந்த ஒரு மங்கை எழுந்து நிற்கின்றாள். அவளுக்கு உள்ள பெரும் சக்தி என்னவென்றால் பேப்பரில் இருப்பதை கண்ணை துணியால் கட்டி கொண்டே வாசிப்பாளாம், புலமை வாய்ந்த பெரும் புலவர் போல், மன்னா நீ வாழ்க,உன் மகன் வாழ்க, பேரன் மற்றும் உன் வம்ச வியாபாரம் வாழ்க, என ஒரே ராகத்தில், உச்சஸ்தாயில் கவிதை பாடுகிறாள். இதற்கு ஏன் கண்ணை கட்ட வேண்டும் என்பதுதான் தெரியவில்லை.இத பாக்கும் போது கிறிஸ்தவ சபைகளில் சொல்வது போல் இப்பொழுது குருடர் பார்க்கிறார் ,முடவர் நடக்கின்றார், ஊமை பேசுகிறார் என்பது போல் இருக்கிறது.இனி அடுத்த கிராம வியாபார சபை கூட்டத்தில் சுடலை யாருக்காவது மஸ்தான் வேஷம் போட்டு பல மந்திர தந்திரங்களை அரங்கேற்றுவார் என எதிர்பார்க்கலாம்.ஆம் கண்ணை மூடி படுத்திருக்கும் ஒருவன் "ஏ சைத்தான் பழனிச்சாமி சீக்கிரம் போய்டுவார், ஸ்டாலின் முதல்வராகி புதிய கல்விக் கொள்கைய வரவிடாம,நகைக் கடனை ரத்து பண்ணி, நீட்டை நீக்கி,மோடியை நடு நடுங்க வைப்பார் என சொல்லும் காட்சியும் நடக்கலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.கண்ணை மூடிகொண்டே மறைவாய் இருப்பதையெல்லாம் படிக்கும் அந்த திராவிட பெண்ணை பத்திரமாக திமுகவினர் பார்த்து கொள்ளவேண்டும். அம்மணிக்கு வாக்கு பெட்டிக்குள் எவ்வளவு வாக்கு இருக்கின்றது என்பது முதல், பிரசாந்த் கிஷோரின் பாக்கெட் பேப்பரில் எத்தனை கோடி பாக்கி சுடலையிடம் இருந்து வரணும் என்பது வரை, சரியாக சொல்லிவிடும் திறமை இருக்கிறது. இப்படிபட்ட பெண்ணை வைத்து கொண்டு முதல்வர் பழனிச்சாமியின் ஊழல் பணத்தையெல்லாம் ஏன் திமுக வெளி கொண்டு வரவில்லை என்ப துதான் நம் கேள்வி? நமக்கு தோன்றுவது என்னவென்றால் அப்பெண்ணை அழைத்து முரசொலி மூலபத்திரம் எங்கே இருக்கிறது என கேட்டுப் பார்க்கலாமே?
Rate this:
Cancel
06-ஜன-202119:18:19 IST Report Abuse
chandran, pudhucherry கோல்டன் ஹேர் விட்டுபோச்சி
Rate this:
06-ஜன-202119:28:32 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்Modi got out from his BMW car, adjusted his MAYBACK shades, checked the time on his MOVADA watch, and entered the studio of “”மங்கி பாத்” to advice Indians to buy only MADE IN INDIA products till 2022....
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
06-ஜன-202120:48:34 IST Report Abuse
Vaanambaadiஏவுகணை வெச்சி தாது பார்த்த டீம்கா மண்ணை கவ்வும்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜன-202100:09:23 IST Report Abuse
தமிழவேல் ஊரு ரெண்டானா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.... இங்கே ரெண்டும் குதிக்கிதுங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X