அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே போர்: கமல்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (76)
Share
Advertisement
வேலூர்: வரும் சட்டசபை தேர்தல், ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியுள்ளார்.வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திறந்த ஜீப்பில் இருந்து கமல் பேசியதாவது: சட்டசபை தேர்தல் அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்த உள்ளது. இதற்கு கருவியாக நான் இருப்பேன். வழி நடத்த வேண்டியது மக்களாகிய நீங்கள் தான். மக்கள் நீதி மையம் 3 வயது குழந்தையாக மாறியுள்ளது. இது
கமல், மக்கள்நீதிமையம், மநீமை, கமல்ஹாசன், சட்டசபை, தேர்தல், நேர்மை, போர்,  kamal, kamalhaasan, mnm, makkalneedhimaiyam,  assembly, election,

வேலூர்: வரும் சட்டசபை தேர்தல், ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திறந்த ஜீப்பில் இருந்து கமல் பேசியதாவது: சட்டசபை தேர்தல் அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்த உள்ளது. இதற்கு கருவியாக நான் இருப்பேன். வழி நடத்த வேண்டியது மக்களாகிய நீங்கள் தான். மக்கள் நீதி மையம் 3 வயது குழந்தையாக மாறியுள்ளது. இது வளர்ந்து கொண்டே வருகிறது. வரும் சட்டசபை தேர்தல், ஊழலுக்கும் நேர்மைக்கும் நடக்கும் போர். இதில் யார் ஜெயித்தால் என்ன என்று இல்லாமல், நேர்மையின் பக்கம் நின்று மக்கள் நீதி மையத்தை, ஆதரிக்க வேண்டும். மக்கள் நீதி மையம் மற்ற கட்சிகளை போல் வாக்குறுதி அளிக்கவில்லை. வாக்குறுதி கேட்கவந்துள்ளேன். நேர்மையான ஆட்சி நமக்கு வேண்டும் என தங்களிடம் வாக்குறுதி கேட்டு வந்துள்ளேன். என்னிடம் கூடும் கூட்டம் பிரியாணிக்காக வரவில்லை. நேர்மையான தமிழகம் வேண்டும் என்பதற்காக கூட்டம் வருகிறது. மக்களாகிய நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் நீதி மையத்தில் சேர வேண்டும். நீங்களும் இணைந்து தேரை இழுத்தால் தான்நாளை நமதாக்க முடியும்.


latest tamil news




ஆம்பூரில் நிலத்தடி நீரை அதிக அளவில் மாசுபட்டுள்ளது. இதனை சரியாக பராமரிக்க வேண்டும். தமிழகத்தில் திறந்த வெளி சாக்கடைகள் அதிகமாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கல்வி முறையில் மாற்றம் வேண்டும். அதற்காக மக்கள் நீதி மையத்தை ஆதரிக்க வேண்டும். என் மீது இருக்கும் அன்பை, கட்சியில் இணைந்து தொண்டு செய்ய வேண்டும். மக்களின் பலத்தை பயன்படுத்தி நேர்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும். அதுதான். மக்கள் நீதி மையத்தின் குறிக்கோள். மக்கள் நீதி மையம் நேர்மையான ஆட்சி அமைக்க மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. சட்டசபை தேர்தல் வர இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளது. ஜனநாயகம் புத்துயிர் பெற மக்கள் நீதி மையத்திற்கு ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு கமல் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
07-ஜன-202121:11:41 IST Report Abuse
madhavan rajan நேர்மைக்கும் கமலுக்கும் என்ன சம்பந்தம். திமுகவும் அதிமுகவும் மோதுகின்றன. இதில் யாரை நேர்மை என்கிறார்?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-ஜன-202115:20:56 IST Report Abuse
Sridhar முதலில் உன் கட்சி செலவுகளுக்கு கணக்கு காமிச்சுட்டு அப்புறம் நேர்மையா பத்தி பேசுய்யா.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-ஜன-202113:17:55 IST Report Abuse
Malick Raja கமலிடம் ஒருவர் என்ன சார் போர்ன்னு சொன்னீங்களே .. அட போங்கய்யா பெரிய அக்கப்போர்ன்னு சொனேன் ..என்றாராம் .. இவரெல்லாம் திரைஉலகம் என்று நினைத்து அரசியலில் வந்தால் அதெல்லாம் நடக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X