தியேட்டர்களில் 'ஹவுஸ்புல்' அனுமதி : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி : தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதை திரும்ப பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் தீபாவளியை ஒட்டி 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழகத்தில் அனுமதி
TNTheatres, TNGovt, Master, Eeswaran, Theatres,

புதுடில்லி : தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதை திரும்ப பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகமும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் தீபாவளியை ஒட்டி 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க தமிழகத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் தியேட்டருக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து திரையுலகினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது விஷயமாக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். காரணம் அவரின் மாஸ்டர் படமும் பொங்கலுக்கு வெளியாக உள்து.

இந்நிலையில் தியேட்டர்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல்களுடன் 100 சதவீதம் இயங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இது திரையுலகினருக்கு உற்சாகத்தை தந்தது. பொங்கலை ஒட்டி விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் திரையுலகினரும் இதை வரவேற்று பட வெளியீட்டிற்கு தயாராகினார்.


latest tamil news
ஆனால் மற்றொருபுறம் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. திரையுலகை சேர்ந்தவர்களும், டாக்டர்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ''தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை'' என்றார். இவரின் பேஸ்புக் பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. பலரும் இவரது கருத்தை வரவேற்று இந்த முடிவை கைவிட வேண்டும் என கருத்து பதிவிட தொடங்கினர்.

ஒரு பெரிய படம் வெளிவந்தால் அதிக பட்சமாக இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் இரண்டு வாரங்களில் ஆகும் வசூல், 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கும் போது மேலும் இரண்டு வாரங்களில் வசூலித்துவிடப் போகிறது, அதனால் 100 சதவீதம் வேண்டாம் என்பது போன்ற கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''கொரோனா வழிகாட்டு முறைகளில் ஜன., 31 வரை தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது விதிமீறல். எனவே தமிழக அரசின் அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த கடிதத்தால் தியேட்டர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 50 சதவீதமாக குறைக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.ANBARASAN - muscat,ஓமன்
07-ஜன-202109:08:01 IST Report Abuse
K.ANBARASAN எடப்பாடிக்கு தேர்தல் சமயத்தில் இது வேண்டாத வேலை
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
07-ஜன-202107:55:44 IST Report Abuse
A.George Alphonse திரை அரகங்களில் சினிமா பார்க்க வேண்டும்.உயிரே பிரதானம் என்று வீட்டிலேயே இருந்தாலே போதும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜன-202100:00:18 IST Report Abuse
தமிழவேல் தலைப்பு "மோடி எதிர்ப்பு" ன்னு எதிர்பார்த்தேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X