இதய நோய் காரணமாக தெருவில் விடப்பட்ட நாயை மீட்டு உயர்சிகிச்சை அளித்து மாதம் பனிரெண்டாயிரத்திற்கு தற்போது மருந்து மாத்திரை வழங்கி பராமரித்து காப்பாற்றி வருகிறார் ஒருவர்.
![]()
|
சென்னை தி.நகர் சரோஜினி தெருவைச் சேர்ந்தவர் ராஜராம் பட்டாபிராமன் பழம் பொருள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட இவர் தெருவில் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு தானாக உணவு எடுத்துக் கொள்ளாத நாய்களை எடுத்து பராமரித்து வளர்த்து வருகிறார்.
அப்படி கடந்த மாதம் நடக்க முடியாமல் தெரு ஒரத்தில் படுத்துக் கிடந்த டாபர் இன நாய் ஒன்றை துாக்கிக்கொண்டு வேப்பேரியில் உள்ள அரசு மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.
![]()
|
மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த நாயை ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே மூலம் பரிசோதித்து பார்த்த போது இதய நோயால் அவதிப்படுவது தெரிந்தது.நாயை உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர்.வெண்டிலேட்டர் உதவியுடன் சில நாள் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு நாய் கொஞ்சம் தேறியது.தொடர்ந்து சத்தான ஆகாரம் மற்றும் மருந்து மாத்திரை வழங்கிய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது வீட்டில் வைத்து இதய நோயாளியை பாராமரிப்பது போல பத்திரமாக பராமரித்துவருகிறார் இந்த நாய்க்கு மட்டும் மருந்து மாத்திரை வகையில் மாதம் பனிரெண்டாயிரம் ரூபாய் செலவழித்து வருகிறார்.
இது குறித்து ராஜராம் கூறும்போது,வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை பராமரிக்க முடியாத சூழ்நிலையில் சிலர் இப்படி தெருவில் விடுவது வழக்கம்தான் நாட்டு நாய் என்றால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும் ஆனால் இது போன்ற டாபர் இனத்து உயர் ரக நாய்களுக்கு பிழைத்துக் கொள்ள தெரியாது அப்படித்தான் இந்த நாய் மிகச் சோர்வுடன் தெருவில் படுத்துக் கிடந்தது.
மனிதர்களுக்கு வரக்கூடிய எல்லாவித நோய்களும் நாய்களுக்கும் வரும் அப்படித்தான் இதற்கு இதய நோய் வந்துள்ளதை டாக்டர்கள் மூலம் அறிந்தேன் இதை இப்போது காப்பாற்றினாலும் தொடர்ந்து பராமரிக்க கொஞ்சம் அதிகம் செலவாகும் என்றனர் நாயை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் அதன்பிறகு செலவைப்பற்றி கவலைப்படவில்லை.
இப்போது ‛ஜோரோ' மிகவும் ஜோராக இருக்கிறான்,என் மீது அதீத அன்பை பொழிகிறான்,ஏற்கனவே வீட்டில் உள்ள ‛பரமேஸ்வரன்' மற்றும் ‛பட்டு' ஆகிய நாய்களுடன் மிகவும் சிநேகமாக இருக்கிறான்,ஜோராவும் நானும் மிகவும் சந்தோஷமாக இருக்கறோம் என்றார் மகிழ்ச்சியுடனும் நெகிழ்சியுடனும்.
-எல்.முருகராஜ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement