அறிவியல் ஆயிரம்
அண்டார்டிகா பெண்
உலகில் உள்ள ஏழு கண்டங்களில் ஒன்று அண்டார் டிகா. இது முழுவதும் பனிக்கட்டிகளால் சூழ்ந்த பகுதி. இங்கு மனிதர்கள் வாழ முடியாது. ஆனால் ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மட்டும் சென்று வருகின்றனர். இந்நிலையில் அண்டார்டிகா சென்ற முதல் பெண் கரோலின் மிக்கெல்சன். டென்மார்க்கை சேர்ந்த இவர் 1906ல் பிறந்தார். திருமணத்துக்குப்பின் நார்வேக்கு குடிபெயர்ந்தார். 1935ல் லார்ஸ் கிறிஸ்டென்சன் தலைமையில் அண்டார்டிகாவுக்கு ஆராய்ச்சிக்காக சென்ற தோர்ஷவன் கப்பலில் இவரும் சென்றார். 1935 பிப்.20ல் அண்டார்டிகாவில் காலடி எடுத்து வைத்தார்.
தகவல் சுரங்கம்
உயரமான விமான நிலையம்
இந்தியாவில் உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் உள்ளது. இதற்கு இந்திய புள்ளியியல் அறிஞர் குசோக் பகூலா ரிம்போச்சே பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10,682 அடி உயரத்தில் உள்ளது. உலகின் 23வது உயரமான விமான நிலையம். இங்கு மாலை நேரத்தில் வானிலை விமான சேவைக்கு உகந்ததாக இருக்காது என்பதால் விமான புறப்பாடு, தரையிறங்குதல் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும். இங்கிருந்து டில்லி, மும்பை, சண்டிகர் நகரங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE