'விளம்பரம் கிடைச்சா சரி!'
கரூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, வெங்கமேடு, வி.வி.ஜி.நகர் ரேஷன் கடையில், சமீபத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, எழுதி கொடுத்ததைக் கூட, சரியாக படிக்கத் தெரியவில்லை. கரூரில் மருத்துவக் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டு கடந்த நிலையில், இன்னும் கட்டப்படவில்லை எனப் பேசியுள்ளார்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அவர் சொல்றது உண்மை தான்... ஸ்டாலின் தப்பு தப்பா பேசுறாரு... இது, அவரின் வளர்ச்சிக்கு நல்லதில்லை' என்றார்.
அருகிலிருந்த இளம் நிருபர் ஒருவர், 'அப்படி தப்பா பேசினதால தான், சமூக வலைதளங்களில், இவரோட பேச்சு, 'டிரெண்டிங்' ஆகுது... எப்படியோ விளம்பரம் கிடைச்சா சரி தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE