சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை, அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல, கேரளாவிலும்,

'டவுட்' தனபாலு

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழர் இறைவன், முப்பாட்டன் முருகப் பெருந்தகையைப் போற்றிக் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை, அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல, கேரளாவிலும், புதுச்சேரியிலும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கையை ஏற்று, தைப்பூச திருநாளை, விடுமுறையாக அரசு அறிவித்துள்ளதா அல்லது தேர்தல் நேரம் என்பதால், ஹிந்துக்களுக்கு, 'ஐஸ்' வைப்பதற்காக, இவ்வாறு அறிவித்துள்ளதா என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. எனினும், அய்யப்பன் பூமியான அந்த கேரளாவிலும் அரசு விடுமுறை கேட்பது, முருகப் பெருமானுக்கே சற்று வெட்கமாகத் தான் இருக்கும்.

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடனை தள்ளுபடி செய்வோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்விக் கடன் என்பது வங்கிகளால், மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாத விவகாரத்தில், இயலாத வாக்குறுதியை அளிப்பது, மக்களை ஏமாற்றும் செயல்.

'டவுட்' தனபாலு: இப்படித் தான், கடந்த லோக்சபா தேர்தலின் போது, 'வங்கிகளில் அடகு வைத்துள்ள தங்க நகைகளை மீட்டு, உங்களிடமே கொடுத்து விடுவோம்' என, தி.மு.க., கூறியதாக, ஆளும் தரப்பில் புகார் கூறப்படுகிறது. அதுவே நிறைவேற்றப்படாத நிலையில், வங்கிக்கடன் தள்ளுபடியும், சும்மா, 'நாம் கே வாஸ்' தானோ என்ற, 'டவுட்' வருகிறது!


பத்திரிகை செய்தி
: வரும், 15ல் திருவள்ளுவர் தினம்; 26ல் குடியரசு தினம்; 28ல், வடலுார் ராமலிங்க அடிகள் நினைவு நாள் வருகிறது. இதனால், அந்த மூன்று நாட்களுக்கும், மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினங்களில், மதுக் கடைகள் மற்றும் பார்களில், முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: தொடர்ந்து, மூன்று நாட்கள் கடைகள் பல முறை அடைக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து, 100 நாட்கள், கொரோனா காலத்தில் அடைத்த போதிலும், நம்மவர்கள் அசரவில்லை. அதனால், இந்த மூன்று நாட்கள் 'கடை' அடைப்பது, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதில், யாருக்கும், 'டவுட்டே' இல்லை!

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRINIVASAN - Abu Dhabi,இந்தியா
07-ஜன-202114:59:12 IST Report Abuse
SRINIVASAN கேரள பெரும்பான்மை மக்களின் குல தெய்வம் பழனி முருகன் என்பது தனபாலுக்கு தெரியாதா, வெட்கப்படாம சீமானிடம் அல்லது கேரள தலைவர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
07-ஜன-202114:07:46 IST Report Abuse
karutthu மதுக்கடை விடுமுறையை சஸ்பென்சாக வைக்கவேண்டும் அப்போ தான் குடிப்பதும் குறையும்
Rate this:
Cancel
amudhan - chennai,இந்தியா
07-ஜன-202113:12:06 IST Report Abuse
amudhan இந்த செபாஸ்டியன் சைமன் நம் இந்து மதம் பற்றி பேச விடுவதே தவறு. எங்கள் கடவுள் முருகனை நாங்கள் எங்கள் விருப்பம் போல அழைப்போம், வழிபடுவோம். நம் கடவுளை முப்பாட்டன் என அழைத்து, உருவத்தை மாற்றி தவறாக சித்தரிக்கிறான். இதேபோல யேசுவையோ, அல்லாவையோ தவறாக சித்தரித்து இவன் பேசுவானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X