சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சபரீசன் நண்பர் மூலம் 'சீட்' கேட்கும் புள்ளி!

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சபரீசன் நண்பர் மூலம் 'சீட்' கேட்கும் புள்ளி!''பதவின்னதும் பம்பரமா களத்துல இறங்கிட்டாருல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''பதவிக்கு மயங்காத பேர்களுண்டோ... யார் ஓய் அது...'' என, விசாரித்தார் குப்பண்ணா.''ஈரோடு மாவட்ட தி.மு.க.,வுல அசைக்க முடியாத சக்தியா இருந்தவங்க, என்.கே.கே. பெரியசாமி, அவரது மகன் ராஜா... பல அடாவடிகள்ல ராஜா

  டீ கடை பெஞ்ச்


சபரீசன் நண்பர் மூலம் 'சீட்' கேட்கும் புள்ளி!



''பதவின்னதும் பம்பரமா களத்துல இறங்கிட்டாருல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''பதவிக்கு மயங்காத பேர்களுண்டோ... யார் ஓய் அது...'' என, விசாரித்தார் குப்பண்ணா.

''ஈரோடு மாவட்ட தி.மு.க.,வுல அசைக்க முடியாத சக்தியா இருந்தவங்க, என்.கே.கே. பெரியசாமி, அவரது மகன் ராஜா... பல அடாவடிகள்ல ராஜா ஈடுபட்டதால, அவரது பதவிகளை பறிச்சிட்டாவ வே...

''அப்புறம், மாவட்டத்தையும் ரெண்டா பிரிச்சு, வேற செயலர்களை போட்டுட்டதால, கட்சி பணியிலேர்ந்து ராஜா ஒதுங்கிட்டாரு...

''சமீபத்துல ஈரோடு மாவட்டத்துல ஆய்வு செய்த, 'ஐபேக்' குழு, 'தேர்தலை சந்திக்க, ராஜா போன்ற ஆட்கள் தேவை'ன்னு சொல்லி இருக்கு வே...

''ஸ்டாலினும், 'மறுபடியும் கட்சி பணிகள்ல தீவிரமா இறங்குங்க... சீக்கிரமே பொறுப்பு தர்றேன்'னு சொல்லிஇருக்காரு... இப்ப, கவுந்தப்பாடியில இருந்தபடி, மறுபடியும் கட்சி பணிகள்ல ராஜா வேகம் காட்ட ஆரம்பிச்சிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஐபேக் டீமே ஆடிப் போயிடுச்சுங்க...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''அவங்க தானே, தி.மு.க.,வையே ஆட்டி வச்சிட்டு இருக்காங்க... நீங்க புதுசா சொல்றீங்களே பா...'' என்றார், அன்வர்பாய்.

''இல்லை... ஸ்டாலின் நடத்துற மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை, ஐபேக் டீம் தான் ஏற்பாடு பண்ணுது... எப்படி கூட்ட மேடை அமைக்கணும்... யார் யார் எங்க உட்காரணும்... யார் யார் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கணும்னு, பக்காவா பிளான் போட்டு பண்றாங்க...

''இதை எல்லாம் மீறி, கோவை, தொண்டாமுத்துார்ல, ஸ்டாலின் கூட்டத்துல, அ.தி.மு.க., பெண் பிரமுகர் புகுந்து, ஸ்டாலினை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு, ரகளை ஆயிடுச்சே... இதுல, ஸ்டாலின் ரொம்பவே, 'அப்செட்' ஆகிட்டாருங்க...

''ஐபேக் டீமும் இதை எதிர்பார்க்கலையாம்... அடுத்தடுத்த கூட்டங்கள்ல எதுவும் நடந்துடக் கூடாதுன்னு கண்கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எம்.எல்.ஏ., சீட் வாங்க, பல லட்சங்களை செலவு பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு மாறினார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க.,வுல முக்கிய புள்ளியா இருக்கறவர், திருத்தணியைச் சேர்ந்தவர்... ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பர் ஒருத்தர், வாரந்தோறும் செவ்வாய் கிழமை, திருத்தணி முருகன் தரிசனத்துக்கு, ஒரு வருஷமா வரார் ஓய்...

''இவருக்கு சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து குடுத்த தி.மு.க., பிரமுகர், ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கட்சியில முக்கிய பொறுப்பையும் வாங்கிட்டார்... அடுத்து, தொகுதியில சீட் வாங்கவும், முயற்சி பண்ணிண்டு இருக்கார் ஓய்...

'ஆனா, 'ஐபேக்' பரிந்துரை பட்டியல்ல, இவர் பேர் இல்லை... அந்த பட்டியல்ல இடம்பெற, பல லட்சங்களை செலவு பண்ணிண்டு இருக்கார் ஓய்...'' என, விளக்கி முடித்தார்
குப்பண்ணா.அரட்டை முடிந்து அனைவரும் கிளம்ப, எதிரில் வந்தவரை

நிறுத்திய அந்தோணிசாமி, ''பூபதி... வெங்கடேசனை ரொம்பவும் நம்பாதீங்க... கடைசி நேரத்துல காலை வாரிட போறாரு...'' என, கதை பேசத் துவங்க,
மற்றவர்கள் நடையைக் கட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜன-202107:27:42 IST Report Abuse
R. SUBRAMANIAN கட்சிப்பணி=அடாவடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X