பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவல் தீவிரம்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி :ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில், 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும், பறவைக் காய்ச்சல் தொற்று பரவியுள்ளதை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்த காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ள மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு,
ஐந்து மாநிலங்கள், பறவைக் காய்ச்சல், பரவல் தீவிரம்,  தடுப்பு நடவடிக்கை, மத்திய அரசு, உத்தரவு

புதுடில்லி :ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில், 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும், பறவைக் காய்ச்சல் தொற்று பரவியுள்ளதை, மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இந்த காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ள மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

உலகில், பல நுாற்றாண்டுகளாகவே, பறவைக் காய்ச்சல் நோய் இருந்து வருகிறது. எனினும், இந்தியாவில், முதல் முறையாக, கடந்த, 2006ல் தான் பறவைக் காய்ச்சல் பரவியது. குளிர் காலங்களில், நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளால் தான், இந்தக் காய்ச்சல் பரவுகிறது.

இந்த நோய்க்கான வைரஸ், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், இந்தியாவில், 2006ல், மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தியா, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து, இப்போது தான் விடுபடத் துவங்கியுள்ளது. இந்நிலையில், நம் நாட்டில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவத் துவங்கியிருப்பது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை, மத்திய அரசு நேற்று உறுதி செய்தது.


பரிசோதனை



இது பற்றி மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் ஏராளமான காக்கைகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில், பாரன், ஜலாவர், கோட்டா மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தில், மாண்டசூர்,
இந்துார், மால்வா மாவட்டங்களிலும், காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேச மாநிலம், காங்கரா பகுதியில், இடம் விட்டு இடம் நகரும் பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளிலும், வாத்துப் பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு, கடந்த, 1-ம் தேதி மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

ஹிமாச்சல பிரதேசத்துக்கு, 5-ம் தேதியன்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க, தேவையான வழிகாட்டல்கள் மத்திய அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. கேரள அரசு, பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை, ஏற்கனவே துவங்கி, பின்பற்றி வருவதாக தகவல்கள் உறுதி செய்கின்றன.


உயர்மட்டக் குழு



பறவைக் காய்ச்சல் தொடர்பாக, மத்திய கால்நடை வளர்ப்புத்துறையின் சார்பில், டில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவியுள்ள, நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வாயிலாக, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு உயர்மட்டக் குழுவை, பாதிக்கப்பட்ட கேரளா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது.


அறிகுறிகள் என்ன?



பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் மனிதர்களிடம் தென்படும் அறிகுறிகள்: 'ப்ளூ' காய்ச்ச்சலால் பாதிக்கப்படுபவர்களிடம் தென்படும் அறிகுறிகளே, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமும் தென்படும்.இருமல், மூச்சு விடுவதில் பிரச்னை, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல், உடல் வலி, சளி, தொண்டை வலி, மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால், அவர்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று போக்கு போன்றவை ஏற்படலாம். தொற்று ஏற்பட்டு, 25 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.


தடுப்பது எப்படி?



பறவைக் காயச்சலில் இருந்து பாதிக்கப்படுவதை தடுக்க, கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் செய்தால், சுகாதார நடவடிக்கைளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.கைகளை அடிக்கடி சோப் போட்டு தேய்த்து, வென்னீரில் கழுவ வேண்டும். குறிப்பாக உணவு சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், இதைப் பின்பற்ற வேண்டும். பயணத்தின் போது, கிருமி நாசினி மூலம், கைகளை சுத்தம் செய்வது நல்லது. கோழி, வாத்துப் பண்ணைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. கோழி, வாத்து இறைச்சிகளை, அரைவேக்காட்டில் சாப்பிடக் கூடாது. பச்சை முட்டைகளை சாப்பிட வேண்டாம்.


ம.பி.,யில் கோழி இறக்குமதிக்கு தடை



மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணிகளை, முதல்வர் சவுகான் நேற்று ஆய்வு செய்தார். கால்நடை வளர்ப்புத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பின், சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ''மத்திய பிரதேசத்திலுள்ள கோழி பண்ணைகளில், பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. பறவைக் காய்ச்சல் குறித்து, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளா உட்பட சில தென் மாநிலங்களில் இருந்து, கோழிகளை இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜன-202116:45:14 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) உயிர்களை கொல்வது பாவம் அதை ஒருபோதும் செய்யாதீர்கள்
Rate this:
Cancel
07-ஜன-202111:54:35 IST Report Abuse
ஆப்பு நாமக்கல்லில் கோழிகளை அடைச்சு வளர்க்கிறதைப் பாத்தா பாவமா இருக்கு.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
07-ஜன-202110:38:58 IST Report Abuse
sahayadhas த.நாட்டில் 85% அசைவம் |..You are waste
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X